பலோன் டி'ஓர் விருதுக்கு மெஸ்சி பெயர் பரிந்துரை...!! ரொனால்டோ பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி...!


பலோன் டிஓர் விருதுக்கு மெஸ்சி பெயர் பரிந்துரை...!! ரொனால்டோ பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
x

image courtesy; instagram/leomessi

தினத்தந்தி 7 Sept 2023 1:27 PM IST (Updated: 7 Sept 2023 1:39 PM IST)
t-max-icont-min-icon

கால்பந்து உலகின் மிக உயரிய விருது பலோன் டி'ஓர்.

புது டெல்லி,

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருது அக்டோபர் 30ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த லியோனல் மெஸ்சி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அதிகமுறை இந்த விருதை வென்றவரும் இவரே. மெஸ்சி இதுவரை 7 முறை இந்த விருதை வென்றுள்ளார்.

மேலும் இந்த பட்டியலில் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் உள்ளனர். இதில் லியோனல் மெஸ்சி மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் விருதை வெல்வதில் முன்னிலை வகிக்கின்றனர்

இதில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது பெயர் இந்த பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது 20 வருடங்களுக்கு பிறகு இதுவே முதல் முறை. 5 முறை இந்த விருதை பெற்றுள்ள அவர் இடம் பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 More update

Next Story