மனைவி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு... அதிர்ச்சியில் உறைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ - வீடியோ


மனைவி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு... அதிர்ச்சியில் உறைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ - வீடியோ
x

மனைவி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசால் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிர்ச்சியில் உறைந்தார்.

லிஸ்பன்,

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் மான்ஜெஸ்டர் யுனேட்டட் கிளப் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். தற்போது, புதிய கிளப் அணியின் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்யூஸ் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கியுள்ளார். ரொனால்டோவுக்கு அவரது மனைவி புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார்.

வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பார்த்த ரொனால்டோ திகைத்து நின்றார். அந்த காரை ரொனால்டோவுக்கு அவரது மனைவி ஜார்ஜினா பரிசாக அளித்தார்.

அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுப்பொருட்களையும் அவர் வழங்கினார். இது தொடர்பான வீடியோவை ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கிய தனது மனைவிக்கு 'நன்றி என் அன்பே' என்று ரொனால்டோ சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவுக்கு அவரது மனைவி பரிசாக வழங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரின் இந்திய மதிப்பு 2.50 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.



Next Story