உலக கோப்பை கால்பந்து: மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'


உலக கோப்பை கால்பந்து: மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
x

Image Tweeted By FIFAWorldCup

இன்று நடந்த முதல் போட்டியில் 'எப்' பிரிவில் உள்ள மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின.

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று 'எப்' பிரிவில் நடந்த முதல் போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின.

அல் பெய்த் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணியின் முன்கள வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர். இருப்பினும் இரு அணிகளின் கோல் கீப்பர்களான டொமினிக் லிவகோவிக் (குரோஷியா) மற்றும் யாசின் பௌநோ (மொரோக்கோ) தங்களது எதிரணி வீரர்களின் கோல் முயற்சியை பலமுறை அற்புதமாக தடுத்து நிறுத்தினர்.

இதனால் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்து இருந்த இரு அணியின் ரசிகர்கள் 2-வது பாதி ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் 2-வது பாதியிலும் இரு அணி வீரர்களும் இறுதி வரை கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் போட்டி மிகுந்த பரபரப்பாக நடைபெற்றது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் 'டிரா'-வில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. அதன் பின்னர் இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story