நட்புறவு கால்பந்து போட்டி: இந்தியா- வியட்நாம் அணிகள் நாளை மோதல்


நட்புறவு கால்பந்து போட்டி: இந்தியா- வியட்நாம் அணிகள் நாளை மோதல்
x

Image Tweeted By @IndianFootball 

இந்திய அணி நாளை பலம் வாய்ந்த வியட்நாம் அணியை எதிர்கொள்கிறது.

ஹோ சி மின்,

வியட்நாமில் நடைபெற்று வரும் ஹங் தின் நட்புறவு கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி பங்கேற்றுள்ளது. ஹோ சி மின் நகரில் உள்ள தோங் நாட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி நாளை பலம் வாய்ந்த வியட்நாம் அணியை எதிர்கொள்கிறது. வியட்நாம் அணி தங்கள் முதல் போட்டியில் சிங்கப்பூர் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

1 More update

Next Story