ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி
x

இன்றிரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் மற்றொரு அரைஇறுதியின் 2-வது சுற்றில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன

பெங்களூரு,

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. இதில் பெங்களூரு எப்.சி.- மும்பை சிட்டி இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று பெங்களூருவில் நேற்றிரவு நடந்தது. இதில் வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் மும்பை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தின் முடிவையும் கணக்கிடும் போது தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை உருவானதால் முடிவை அறிய 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது.

இதில் கோல் ஏதும் அடிக்கப்படாததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி 9-8 என்ற கணக்கில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

இன்றிரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் மற்றொரு அரைஇறுதியின் 2-வது சுற்றில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன

Next Story