ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் கானர் ஷீல்ட்ஸ் ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது.



Next Story