ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் மோதல்
x

image courtesy; AFP 

தினத்தந்தி 5 Nov 2023 5:04 AM GMT (Updated: 5 Nov 2023 5:29 AM GMT)

சென்னையின் எப்.சி., இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கோவா அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு 'டிரா' கண்டு புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.


Next Story