ஐஎஸ்எல் கால்பந்து ; சென்னையின் எப்சி - கிழக்கு வங்காளம் போட்டி 'டிரா'

Image : Indian Super League
புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 7வது இடத்திலும் , கிழக்கு வங்காளம் அணி 9வது இடத்திலும் உள்ளன.
சென்னை,
12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை இடைவெளி விடப்பட்டது.இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து இன்று முதல் மீண்டும் போட்டிகள் நடைபெற்றது .
இதில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்சி - கிழக்கு வங்காளம் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்ட நேரமுடிவில் 1-1 என டிரா ஆனது. புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 7வது இடத்திலும் , கிழக்கு வங்காளம் அணி 9வது இடத்திலும் உள்ளன.
Related Tags :
Next Story






