ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-ஐதராபாத் அணிகள் மோதின.

ஜாம்ஷெட்பூர்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி- ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஐதராபாத் அணி சார்பில் முகமது யசீர் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் ஏடிகே மோகன் பகான்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (இரவு 7.30 மணிக்கு) அணிகள் மோதுகின்றன.


Next Story