ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் பர்திப் கோகாய் ஆட்டத்தின் 32-வது நிமிடத்திலும், அலெக்ஸ் சாஜி 51-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஐதராபாத் அணி சார்பில் மகான் ஆட்டத்தின் 70-வது நிமிடத்திலும், ஜோவா விக்டர் 76-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story