ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி..!


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி..!
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் டேனியல் ஆட்டத்தின் 2, 20 மற்றும் 79-வது நிமிடங்களில் என 3 கோல்கள் அடித்தார். டவுங்கல் ஆட்டத்தின் 70-வது நிமிடத்திலும் ஜோனத்தான் ஆட்டத்தின் 74-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஐதராபாத் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story