ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

கொச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

கொச்சி,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் டேனிஷ் பரூக் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story