ஐஎஸ்எல் கால்பந்து ; மோகன் பகான் - ஒடிசா ஆட்டம் 'டிரா'


ஐஎஸ்எல் கால்பந்து ; மோகன் பகான் - ஒடிசா ஆட்டம் டிரா
x

தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின

கொல்கத்தா,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது. இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-2 என போட்டி டிரா ஆனது. ஒடிசா அணி சார்பில் அகமது ஜாஹூ 2 கோல்கள் அடித்தார். மோகன் பகான் அணி சார்பில் அமாண்டோ சதிக் 2 கோல்கள் அடித்தார்.


Next Story