ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி
x

Image Tweeted By MumbaiCityFC

மும்பை சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மும்பை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி -பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் மும்பை அணி சார்பில் பெரேரா ஆட்டத்தின் 14-வது நிமிடத்திலும், லாலெங்மாவியா ஆட்டத்தின் 32-வது நிமிடத்திலும், பிபின் ஆட்டத்தின் 58-வது நிமிடத்திலும், லலின்சுவாலா சாங்டே ஆட்டத்தின் 74-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

பதிலுக்கு பெங்களூரு அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story