ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் லல்லியன்சுவாலா சாங்டே ஆட்டத்தின் 18-வது நிமிடத்திலும், மெஹ்தாப் சிங் 31-வது நிமிடத்திலும், ஜார்ஜ் பெரேரா 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஐதராபாத் எப்.சி. அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story