ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி-ஐதராபாத் ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி-ஐதராபாத் ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

தினத்தந்தி 28 Oct 2023 5:09 PM GMT (Updated: 28 Oct 2023 5:10 PM GMT)

மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகள் மோதின.

மும்பை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் மனோஜ் முகமது ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி சார்பில் ஜோஸ் லூயிஸ் ஆட்டத்தின் 90+6-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story