ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியிடம் மும்பை சிட்டி அதிர்ச்சி தோல்வி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியிடம் மும்பை சிட்டி அதிர்ச்சி தோல்வி
x

image courtes: Indian Super League twitter

மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

மும்பை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் மகேஷ் சிங் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை சிட்டி அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story