ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி
x

image courtesy: Kerala Blasters FC twitter

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

மும்பை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் ஜார்ஜ் பெரேரா டயஸ் ஆட்டத்தின் 45+4-வது நிமிடத்திலும் லாலெங்மாவியா ரால்டே 66-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் டேனிஷ் பரூக் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story