ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

கவுகாத்தி,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து கவுகாத்தியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஜித்தின் சுப்ரான் ஆட்டத்தின் 90+1-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் ஈஸ்ட் பெங்கால் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.


Next Story