ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

கவுகாத்தி,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒடிசா அணி சார்பில் நந்த குமார் ஆட்டத்தின் 36-வது நிமிடத்திலும் விக்டர் ஆட்டத்தின் 65-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும் தியாகோ ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் வில்மர் ஜோர்தான் ஆட்டத்தின் 90+2 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒடிசா அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது.


Next Story