ஐ.எஸ்.எல் கால்பந்து; பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்...!


ஐ.எஸ்.எல் கால்பந்து; பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்...!
x

Image Courtesy: @IndSuperLeague

10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

டெல்லி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

5 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 2 டிரா, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 11வது இடத்திலும், 6 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் எப்.சி அணி 2 டிரா, 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 12வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story