ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @HydFCOfficial

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 16 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி கண்டு 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 17 ஆட்டங்களில் ஆடி உள்ள ஐதராபாத் அணி 4 டிரா, 13 தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story