ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஒடிசா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட்  -  ஒடிசா அணிகள் இன்று மோதல்
x

கவுகாத்தியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஒடிசா அணிகள் மோத உள்ளன.

கவுகாத்தி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஒடிசா அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நார்த் ஈஸ்ட் அணி 21 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 டிரா, 8 தோல்வி கண்டு 23 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 21 ஆட்டங்களில் ஆடியுள்ள ஒடிசா 11 வெற்றி, 6 டிரா, 4 தோல்வி கண்டு 39 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story