ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy : @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கவுகாத்தி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

நடப்பு தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி, 3 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 டிரா, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஐதராபாத் அணி உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது


Next Story