ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம் 

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 21 ஆட்டங்கள் ஆடி 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்வி கண்டு 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் பஞ்சாப் அணி 21 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 டிரா, 10 தோல்வி கண்டு 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story