ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி. - கோவா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்;  பஞ்சாப் எப்.சி. - கோவா அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. - கோவா அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி 17 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி கண்டு 32 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 18 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 டிரா, 8 தோல்வி கண்டு 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story