ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பஞ்சாப்...


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்;  ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பஞ்சாப்...
x

Image Tweet : @IndSuperLeague

தினத்தந்தி 27 Feb 2024 4:39 PM GMT (Updated: 29 Feb 2024 4:21 AM GMT)

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஐதராபாத் அணி வீரர்கள் போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.


Next Story