ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஐதராபாத்..? - ஜாம்ஷெட்பூர் அணியுடன் நாளை மோதல்..!


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஐதராபாத்..? - ஜாம்ஷெட்பூர் அணியுடன் நாளை மோதல்..!
x

image courtesy; @HydFCOfficial

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 10 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 10 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 4 டிரா, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஐதராபாத் அணி உள்ளது. அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story