ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியை தொடருமா சென்னை? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

image courtesy: twitter/ @HydFCOfficial/@ChennaiyinFC
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னை,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., ஐதராபாத் எப்.சி.யுடன் மோதுகிறது.
முந்தைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஒடிசாவை வீழ்த்திய சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களம் இறங்க உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணியும் வெற்றி பெற தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக இந்த தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






