ஐ.எஸ்.எல்.-ன் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது: சுனில் சேத்ரி


ஐ.எஸ்.எல்.-ன் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது:  சுனில் சேத்ரி
x

image courtesy; AFP

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐ.எஸ்.எல்.) வரும் 21ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.

பெங்களூரு,

கிரிக்கெட் போட்டிக்கு ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருவது போலவே, கால்பந்து போட்டிக்கு இந்தியாவில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐ.எஸ்.எல்.) நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான ஐ.எஸ்.எல். தொடர் வரும் செப்டம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் கேரளா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக சுனில் சேத்ரி உள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ்.எல். தொடரின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதாக சுனில் சேத்ரி கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் தரம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும் தேசிய அணியில் இடம்பிடிக்க முயற்சிக்கும் வீரர்கள் தங்கள் நிலைகளை மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த களமாக உள்ளது . அதற்கு உதாரணமாக ஐ.எஸ்.எல்.-ல் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம்பிடித்த சந்தேஷ் ஜிங்கனை கூறினார்.

மேலும் , ஐ.எஸ். எல். தொடர் நாட்டுக்காக விளையாட விரும்பும் ஒவ்வொரு வீரருக்கும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த வீரர்கள் வருவதால் தொடரின் தரம் மேம்பட்டு வருகிறது. தொடரில் பெறும் முழுமையான மற்றும் அறிவியல் சார்ந்த பயிற்சி இளைஞர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று கூறினார்.


Next Story