மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு அறிவிப்பு..!

image courtesy; AFP
கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
புவெனஸ் ஐரிஸ்,
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. இதனால் அவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






