தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு...!!


தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு...!!
x

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை வீழ்த்தி 9-வது முறையாக இந்தியா பட்டம் வென்றது.

மும்பை,

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் விழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.இந்திய அணியின் வெற்றியில் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து முக்கிய பங்காற்றினார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி 9-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.சாதனை படைத்த இந்திய அணியினருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சாதனை படைத்த இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பதிவில்"இது ஒரு மிகப்பெரும் வெற்றி.வலிமை மற்றும் உறுதிப்பாடு உடன் விளையாடியதற்கு கிடைத்த பரிசு.இது ஒரு அற்புதமான காட்சி''என்று பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.


Next Story