ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் அணி வெற்றி

Image Courtesy : @realmadrid twitter
ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் பில்பா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
பார்சிலோனா,
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான லா லிகா கால்பந்து போட்டி அங்குள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 20 அணிகள் இடையிலான இந்த போட்டியில் நேற்று நடந்த ஆடம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் பில்பா அணியை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
ரியல் மாட்ரிட் அணியில் ரோட்ரிகோ 28-வது நிமிடத்திலும், ஜூட் பெலிங்ஹாம் 36-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ரியல் மாட்ரிட் கிளப்பில் இணைந்த ஜூட் பெலிங்ஹாம் (இங்கிலாந்து) தனது அறிமுக போட்டியிலேயே கோலடித்து அசத்தினார். லாஸ் பால்மாஸ்-மல்லோர்கா அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Related Tags :
Next Story






