அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்


அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
x

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு இன்று நீக்கியுள்ளது.


இந்திய கால்பந்து சம்மேளனத்தில், தேவையற்ற 3-ம் தரப்பு தலையீடு இருப்பதாக கூறி, இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) அண்மையில் தடை விதித்தது. இதனால் இந்தியாவில் அக்டோபர் மாதம் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை போட்டியை(17 வயதுக்குட்பட்டோர்) நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு இன்று நீக்கியுள்ளது. மேலும் இந்தியாவில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பிபா அமைப்பு அறிவித்துள்ளது.


Next Story