டிராபி டெஸ் சாம்பியன்ஸ் கால்பந்து; எம்பாப்பேவின் பிஎஸ்ஜி அணி சாம்பியன்..!


டிராபி டெஸ் சாம்பியன்ஸ் கால்பந்து; எம்பாப்பேவின் பிஎஸ்ஜி அணி சாம்பியன்..!
x

image courtesy; twitter/@PSG_English

பிஎஸ்ஜி அணி தரப்பில் நட்சத்திர வீரர் எம்பாப்பே மற்றும் லீ காங் இன் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

பாரீஸ்,

பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு டிராபி டெஸ் சாம்பியன்ஸ் கால்பந்து தொடரை நடத்துகிறது. இது லீக் 1 சாம்பியனுக்கும், கூபே டி பிரான்ஸ் சாம்பியனுக்கும் இடையே நடைபெறும் போட்டி ஆகும்.

அதன்படி இந்த வருடம் இதில் பிஎஸ்ஜி மற்றும் துலூஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் துலூஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பிஎஸ்ஜி அணி தரப்பில் நட்சத்திர வீரர் எம்பாப்பே மற்றும் லீ காங் இன் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் பிஎஸ்ஜி அணி இந்த புத்தாண்டை சிறப்பாக தொடங்கி உள்ளது.


Next Story