அகில இந்திய ஆக்கி: தமிழ்நாடு - தணிக்கை துறை ஆட்டம் 'டிரா'


அகில இந்திய ஆக்கி: தமிழ்நாடு - தணிக்கை துறை ஆட்டம் டிரா
x

எம்.சி.சி. - முருகப்பா தங்கக் கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் நேற்று தொடங்கியது.

சென்னை,

எம்.சி.சி. - முருகப்பா தங்கக் கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு- தணிக்கை துறை அலுவலக அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழக அணியில் தனுசும் (23-வது நிமிடம்), தணிக்கை துறை அணியில் அபாரன் சுதேவும் (38-வது நிமிடம்) கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ரெயில்வே அணி 9-1 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியை பந்தாடியது. ரெயில்வே அணியில் யுவ்ராஜ் வால்மிகி 4 கோல்கள் அடித்தார்.

இன்றைய லீக் ஆட்டங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி - தணிக்கை துறை அலுவலகம் (பிற்பகல் 2.30 மணி), கர்நாடகா - இந்திய ரெயில்வே (மாலை 4.15 மணி), இந்திய விமானப்படை - தமிழ்நாடு (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story