புரோ லீக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு


புரோ லீக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு
x

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 12 ஆட்டங்களில் ஆடி 27 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் அதன் சொந்த மண்ணில் தலா 2 முறை மோதுகிறது. பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டம் ஆன்ட்வெர்ப்பில் ஜூன் 11, 12-ந் தேதிகளிலும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் ரோட்டர்டாமில் ஜூன் 18, 19-ந் தேதிகளிலும் நடக்கிறது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமித் ரோஹிதாஸ் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: சுரஜ் கார்கெரா, ஸ்ரீஜேஷ், பின்களம்: சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), வருண் குமார், அமித் ரோகிதாஸ் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், ஜர்மன்பிரீத் சிங், நடுகளம்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், ஷாம்ஷெர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட ஷர்மா, முன்களம்: குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக்.


Next Story