ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:53 AM GMT (Updated: 11 Aug 2023 1:02 AM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நேற்றுமுன் தினம் நடந்த ஒரு போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

லீக் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.


Next Story