ஆசிய கோப்பை ஆக்கி: சீனா அணியை வீழ்த்தி ஜப்பான் வெற்றி


ஆசிய கோப்பை ஆக்கி: சீனா அணியை வீழ்த்தி ஜப்பான் வெற்றி
x

ஜப்பான் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

சென்னை,

ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம்.இப்போட்டியின் துவக்கம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 2 கோல்கள் அடித்தது . சீனா அணி 1 கோல் மட்டும் அடித்தது . இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என ஜப்பான் வெற்றி பெற்றது.

சீனா ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. ஜப்பான் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. ஆனால் அடுத்து நடைபெறும் பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே அந்த அணிக்கு அரைஇறுதி கதவு திறக்குமா, மூடுமா என்பது தெளிவாகும்.


Next Story