ஆசிய ஆக்கி போட்டி: இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதல்


ஆசிய ஆக்கி போட்டி: இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதல்
x

இந்தியா தொடர்ந்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.

இன்றும் மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளும், 6.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகளும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா, ஜப்பானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் இந்தியா தொடர்ந்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story