ஆசிய ஆக்கி போட்டி: ஜப்பான் அணியை வீழ்த்தி தென்கொரியா வெற்றி


ஆசிய ஆக்கி போட்டி: ஜப்பான் அணியை வீழ்த்தி தென்கொரியா வெற்றி
x

Image : Hockey India Twitter 

தொடக்க நாளான இன்று தொடங்கிய முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின.

சென்னை,

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் தொடக்கத்தில் ஜப்பான் அணி கோல் அடித்தது. இதனால் ஜப்பான் அணி 1-0 எனமுன்னிலை பெற்றது..

இதனை தொடர்ந்து சிறப்பாக ஆடிய தென் கொரியா அணி 2 கோல்கள் அடித்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்றது.

1 More update

Next Story