ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x

ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சலாலா,

அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய அணி தொடக்க சரிவை சமாளித்து 9-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி தரப்பில் நவ்ஜோத் கவுர் (7, 10, 17-வது நிமிடம்) 3 கோலும், மரியனா குஜூர் (9, 12-வது நிமிடம்), ஜோதி (21, 26-வது நிமிடம்) தலா 2 கோலும், மஹிமா சவுத்ரி (14-வது நிமிடம்), மோனிகா (22-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். மலேசிய அணியில் ஜதி முகமது (4,5-வது நிமிடம்), டியான் நாஜெரி (10, 20-வது நிமிடம்) தலா 2 கோலும், அஜிஸ் ஜபிரா (16-வது நிமிடம்) ஒரு கோலும் திருப்பினர்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.


Next Story