எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி: ஸ்பெயின் அணியுடனான தோல்விக்கு என்ன காரணம்?- கேப்டன் ஹர்மன்பிரீத் விளக்கம்


எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி: ஸ்பெயின் அணியுடனான தோல்விக்கு என்ன காரணம்?- கேப்டன் ஹர்மன்பிரீத் விளக்கம்
x

Image Courtesy: AFP

நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

புவனேஸ்வர்,

எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி முதல் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. ஸ்பெயினுக்கு எதிராக இந்திய அணிக்கு ஐந்து பெனால்டி கார்னர்கள் கிடைத்த போதும், இந்தியாவால் ஒன்றை மட்டுமே கோலாக மாற்ற முடிந்தது.

இந்த போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், " இந்த போட்டியில் கோல் அடிப்பதற்கான நிறைய பெனால்டி கார்னர்களைப் பெற்றோம். அதே போல் அணியில் வெவ்வேறு புதிய மாறுபாடுகளுக்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் சில நேரங்களில் புதிய முயற்சிகள் பலனளிப்பதில்லை. அடுத்த வாரம் எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. எனவே கிடைக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்ற முயற்சிப்போம்" என்றார்.

இந்திய அணி நவம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நியூசிலாந்து அணியையும், நவம்பர் 6 ஆம் தேதி ஸ்பெயின் அணியையும் மீண்டும் எதிர்கொள்கிறது.


Next Story