ஆக்கி லீக்: எச்.வி.எப். அணி வெற்றி


ஆக்கி லீக்: எச்.வி.எப். அணி வெற்றி
x

ஆக்கி லீக் போட்டியில் எச்.வி.எப். அணி வெற்றி பெற்றது.





சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் 6-0 என்ற கோல் கணக்கில் யுனிவர்சல் கிளப்பை தோற்கடித்தது.

மெட்ராஸ் ரெஜிமென்ட் அணியில் சுப்பையா 2 கோலும், கணேஷ், கார்த்திக், திவாகர் தலா ஒரு கோலும் அடித்தனர். ஏர் இந்தியா-வேளச்சேரி கிளப் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் கனரக வாகன தொழிற்சாலை (எச்.வி.எப்) 9-0 என்ற கோல் கணக்கில் கோட்டூர் புல் மூன் அணியை பந்தாடியது. எச்.வி.எப். அணியில் ஜெகன் 3 கோலும், அஜய்குமார், சுதர்சன், ரஞ்சித் தலா 2 கோலும் அடித்தனர்.


Next Story