பெண்கள் உலக கோப்பை ஆக்கி : நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி..!!


பெண்கள் உலக கோப்பை ஆக்கி : நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி..!!
x

Image Courtesy : @Hockey India 

இந்திய அணி கிராஸ்ஓவர் சுற்றில் விளையாடவுள்ளது.

ஆம்ஸ்டெல்வீன்,

15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

அதை தொடர்ந்து சீனாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியும் 1-1 என்ற கணக்கில் டிராவானது. இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நேற்று இந்திய பெண்கள் அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 3-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும் தங்கள் பிரிவில் 3-வது இடத்தை பிடித்ததால் கிராஸ்ஓவர் சுற்றில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் நான்கு பிரிவுகளில் இருந்து முதல் நான்கு அணிகள் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெறும், அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் கிராஸ்ஓவரில் இடம்பெறும்.

கிராஸ்ஓவர் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மீதமுள்ள நான்கு காலிறுதி இடங்களைப் பிடிக்கும்.

1 More update

Next Story