இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட கடுமையாக உழைப்பேன்- ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி


இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட கடுமையாக உழைப்பேன்- ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி
x

image courtesy: Hockey India

இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட கடுமையாக உழைப்பேன் என்று ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அரியானாவை சேர்ந்த இளம் முன்கள ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி. இவர் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் " மீண்டும் ஒருமுறை இந்திய ஜெர்சியை அணிவதில் நான் மிகவும் ஆவலாக இருந்தேன். செய்த அனைத்து வேலைகளுக்கும் இது மிகவும் பலனளிப்பதாக உணர்ந்தேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. விளையாட்டில் சிறந்து விளங்கவும், இந்திய மகளிர் ஆக்கி அணி இன்னும் அதிக வெற்றிகளைப் பெறவும் எனது சிறந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வேன்.

ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும்போது, எனது 100 சதவீத்தையும் வழங்குகிறேன். இது நான் எப்பொழுதும் செய்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன். தேசிய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் மேலும் ஆட்டங்களில் வெற்றி பெறவும் கடினமாக உழைப்பேன்" என்று கூறினார்.

1 More update

Next Story