யூனிபர் யு-23 பெண்கள் ஆக்கி போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து பலப்பரிட்சை!


யூனிபர் யு-23 பெண்கள் ஆக்கி போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து பலப்பரிட்சை!
x

5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23 ஆக்கி போட்டிகள் அயர்லாந்தில் நாளை தொடங்கி நடைபெறுகிறது.

டப்ளின்,

5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23 ஆக்கி போட்டிகள் அயர்லாந்தில் நாளை தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது.

யூனிபர் யு-23 ஆக்கி போட்டி தொடரில், நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது.மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.

தொடர்ந்து, ஜூன் 20-ம் தேதி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. அதன்பிறகு ஜூன் 22-ம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி கேப்டன் வைஷ்ணவி விட்டல் பால்கே கூறுகையில், "யூனிபர் யு-23 5 நாடுகள் பங்கேற்கும் ஆக்கி போட்டி தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சியின் போது நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம், இனி வரும் போட்டிகளிலும் அதனைப் பிரதிபலிக்கும் நம்பிக்கையில் உள்ளோம்" என்றார்.



Next Story