உலக ஹாக்கி தரவரிசை : முதல் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி 6-வது இடத்துக்கு முன்னேற்றம்


உலக ஹாக்கி தரவரிசை : முதல் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி 6-வது இடத்துக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : AFP 

இந்திய பெண்கள் ஹாக்கி அணி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மும்பை,

இந்திய பெண்கள் ஹாக்கி அணி உலக ஹாக்கி தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது . சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்திய அணி 6-வது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம் இதுவரை இல்லாத சிறந்த நிலையை இந்திய அணி அடைந்துள்ளது.

ஸ்பெயின் அணியை பின்னுக்கு தள்ளி 2029.396 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 6-வது இடத்தை பிடித்துள்ளது. பெண்கள் ஹாக்கி தரவரிசையில் நெதர்லாந்து அணி முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

ஆண்களுக்கான புள்ளிபட்டியலில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை பின்னுக்கு தள்ளி நெதர்லாந்து அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்கள் ஹாக்கி தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், பெல்ஜியம் அணி 2-வது இடத்திலும் நீடிக்கின்றன.


Next Story