ஜெர்மனி, ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு


ஜெர்மனி, ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
x

ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இந்த மாதத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

வருகிற 16 முதல் 19-ந்தேதி வரை ஜெர்மனியில் நடைபெறும் தொடரில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் சீனாவையும், 2 ஆட்டங்களில் ஜெர்மனியையும் சந்திக்கிறது. இதனை தொடர்ந்து ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தெரஸ்சாவில் வருகிற 25 முதல் 30-ந்தேதி வரை நடைபெறும் 4 நாடுகள் இடையிலான சர்வதேச ஆக்கி தொடரில் இந்திய அணி ஆடுகிறது.

இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, போட்டியை நடத்தும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன. இந்த இரண்டு தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணி வீராங்கனைகள் வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபாம், பின்களம்: தீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, உதிதா, சுஷிலா சானு புக்ராம்பாம், நடுகளம்: நிஷா, மோனிகா, சலிமா டெடி, நேஹா, நவ்னீத் கவுர், சோனிகா, பல்ஜீத் கவுர், வைஷ்ணவி விதால் பால்கி, ஜோதி, முன்களம்: லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, தீபிகா.


Next Story