சர்வதேச ஆக்கி தரவரிசை - இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேற்றம்


சர்வதேச ஆக்கி தரவரிசை - இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேற்றம்
x

சர்வதேச ஆக்கி தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 9-வது இடத்தில் உள்ள மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி மகுடம் சூடுவது இது 4-வது முறையாகும்.

இந்த நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஆக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறியது.

1 More update

Next Story